×

சட்டீஸ்கர் மாநிலத்தில் குறுகிய கால விவசாய கடன் ரூ.6,100 கோடி தள்ளுபடி முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவிப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால கடன் ரூ.6,100 கோடியை தள்ளுபடி செய்து முதல்வர் பூபேஷ் பாகெல் உத்தரவிட்டுள்ளார்.  சட்டீஸ்கரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜ.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. பூபேஷ் பாகெல் நேற்று முன்தினம் முதல்வராக பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, அடல் நகரில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர், முதல்வர் பூபேஷ் பாகெல் அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டீஸ்கரில் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளில் கடந்த நவம்பர் 30ம் தேதி வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம், 16.65 லட்சம் விவசாயிகளின் ரூ.6100 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இது தவிர, வணிக வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், கடன் பெற்றுள்ள தகுதியுடைய விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதேபோல், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படுகிறது.  இந்த 2 வாக்குறுதிகளும் நாங்கள் பதவியேற்ற சில மணிநேரத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் மூலம் ெகாள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.1,750 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அது தவிர, மீதமுள்ள ரூ.750யை மாநில அரசு வழங்கும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhupesh Bhagal ,Chhattisgarh , Chief Minister Bhupesh Bhagal,announced,short-term,agricultural,loan,Chhattisgarh
× RELATED சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை